பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு


பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு
x

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு

விருதுநகர்

அருப்புக்கோட்டை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி மற்றும் பாளையம்பட்டியில் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. செம்பட்டியில் கடந்த 2018-ம் ஆண்டு முத்தரையர் உருவச் சிலையை தற்போதைய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அன்றிலிருந்து தொடர்ந்து செம்பட்டியில் முத்தரையர் சதய விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் செம்பட்டியில் தி.மு.க. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சோலை தலைமையில் நடைபெற்ற முத்தரையர் சதய விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் பாளையம்பட்டியிலும் முத்தரையர் சிலைக்கு அமைச்சர் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சசிகலா, கவுன்சிலர்கள் புவனா, சுப்புலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story