பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்-கல்வித்துறை உத்தரவு

பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்-கல்வித்துறை உத்தரவு
x

கொரனோ தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சென்னை,

கொரனோ தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

  • பள்ளி வளாகத்தில் நுழையும் அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபரை முறையாக பரிசோதித்து தனிமைப்படுத்த வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்திற்குள் சோப்பு, சானிடைசர் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும். இந்த அனைத்து அறிவுரைகளையும் கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story