சட்டத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்-கலெக்டர் பேச்சு


சட்டத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்-கலெக்டர் பேச்சு
x

எந்த சட்டத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என போலீசாருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

எந்த சட்டத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என போலீசாருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

வாணியம்பாடியில் பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் போலீசாருக்கு இளைஞர் நீதி சட்டம் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வாணியம்பாடி சரக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

அ்போது அவர் பேசியதாவது:-

சட்டத்தை மீறுபவர்கள் தான் சிறந்த ஹீரோக்களாக தற்போது கால கட்டங்களில் ஊடகங்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறார்கள். தற்போதைய காலகட்டங்களில் குற்றச்செயலில் ஈடுபவர்களில் இளைஞர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இவர்களை ஊடகங்கள் மூலம் உயர்த்தி பிடிக்கின்ற பொழுது இந்தக் குற்றங்களை செய்வதன் மூலமாக நாம் பெரிய மனிதன் ஆகிவிடலாம் என்று அவர்களுக்கு தவறான எண்ணம் தோன்றுகிறது.

சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு என்று அனைவருக்கும் தெரியும். சட்டம் எனக்கு தெரியாது என்று யாராலும் சொல்ல முடியாது. பெரியோர்களை மதிக்க வேண்டும் என்று சொன்னால் தற்பொழுது யாரும் மதிப்பதில்லை.

மனதிற்கும் மாற்றத்தை தரும்

இந்திய தண்டனை சட்டத்தை நாம் இன்னும் மாற்றவில்லை, வெளிநாட்டில் காவல்துறையில் பணிபுரிபவர்களின் சீருடைகள் மாற்றப்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கறது.

உடை மாற்றத்தை தரும்பொழுது நம் மனதிற்கும் மாற்றத்தை தரும். இந்திய தண்டனை சட்டத்தை நாம் இன்னும் மாற்றவில்லை அந்த சட்டத்தை தந்த பிரிட்டிஷ்காரர்கள் மாறிவிட்டார்கள்.

காவல்துறையினர் குழந்தைகளை குழந்தைகளாக அணுக வேண்டும். இங்கு சாமானிய மனிதர்களுக்கு யாரை அணுகுவது எங்கு அணுகுவது என்று ஒரு தெளிவுரை கிடைப்பதில்லை அதனால் உங்களுக்கு விழிப்புணர்வு என்பது மிக மிக முக்கியம்.

எந்த சட்டத்தை எப்படி அணுக வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுக்கும் பொழுது தான் ஒரு தவறை செய்தால் இந்ததண்ட னை கிடைக்கும் என்று அவர்களுக்கு தெரிய வரும்.

சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் எந்தெந்த தவறுகளை செய்யக்கூடாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரு தலைமுறைக்கு கற்றுத் தருகின்ற விஷயம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும்.

ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும் கூட அடிப்படை விஷயமான சட்டம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் ஒப்படைப்பு

கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட 2 குழந்தைகளை அந்த மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஒப்படைத்திருந்தனர்.

அந்த குழந்தைகளை திருப்பத்தூர் எஸ்.ஆர்.டி.பி.எஸ். சிறப்பு தத்தெடுப்பு நிறுவனத்திடம் கலெக்டர் ஒப்படைத்தார்.

பயிற்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story