அனைவரும் இரண்டு மரக்கன்றுகள் நட வேண்டும்
அனைவரும் இரண்டு மரக்கன்றுகள் நட வேண்டும்
வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் அனைவரும் இரண்டு மரக்கன்றுகள் நட வேண்டும் என்று கலெக்டர் தினஷே்பொன்ராஜ் ஆலிவர் பேசினார்.
மரக்கன்று நடும் விழா
தஞ்சை அருகே உள்ள திட்டை பிரிவு சாலையில் டாக்டர்நல்லி குப்புசாமி கலைக்கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கல்லூரி தாளாளர் வெள்ளைச்சாமி நாடார், முதல்வர்ஜெபஜோதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் தலைமை தாங்கி கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர். சிவந்தி ஆதித்தனார் கட்டிட வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.
இலவச மரக்கன்று
விழாவில் கலெக்டர் பேசியதாவது:- கொரோனா காலத்தில் போதிய ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர். அதனை தவிர்க்க வேண்டும் என்றால் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொருவரும் வீடுகள், கல்லூரி, தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் தங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இதனை நன்கு பயன்படுத்தி இல்லம் தோறும் இரண்டு மரங்களை வளர்க்க வேண்டும். என்று பேசினார்.
400-க்கும் மேற்பட்ட...
விழாவில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். விழாவில் தாசில்தார் மணிகண்டன், கவின் மிகு தஞ்சை இயக்கத்தின் சார்பில் டாக்டர் ராதிகாமைக்கேல், செல்வராணி, ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகாமி ஆகியோர் செய்திருந்தனர்.