ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அனைத்தும் தயார்


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அனைத்தும் தயார்
x

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 70 படுக்கைகள் மற்றும் 15 தீவிர சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 70 படுக்கைகள் மற்றும் 15 தீவிர சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. என்று கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ஒத்திகை நிகழ்ச்சி

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழங்குவது குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-

கொரோனா நோய் தொற்று பாதிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் ஏற்படவில்லை. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க 70 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைக்கான 15 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் போதிய அளவு ஆக்சிஜன் வசதி உள்ளது. நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அளவிற்கு வசதி உள்ளது.

பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை

மேலும் 11 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது. போதியளவு மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கிட், மற்றும் நோய் தொற்று கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் போதியளவு இருப்பில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்குவதற்கு டாக்டர்கள் உட்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்களை பொறுத்தவரை எவ்வகையிலும் அச்சம் கொள்ள தேவை இல்லை.

பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்து செல்ல வேண்டும், கூட்டங்களை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில் குமார், கண்காணிப்பாளர்கள் மலர்வண்ணன், மனோஜ் குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப் குமார் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story