'அண்ணாமலை பெரிய ஆள், சிறியவனாகிய நான் பதில் அளித்தால் சரியாக இருக்காது'- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கிண்டல்


அண்ணாமலை பெரிய ஆள், சிறியவனாகிய நான் பதில் அளித்தால் சரியாக இருக்காது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கிண்டல்
x

அண்ணாமலை பெரிய ஆள், சிறியவனாகிய நான் பதில் அளித்தால் சரியாக இருக்காது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கிண்டலாக கூறினார்.

ஈரோடு

அண்ணாமலை பெரிய ஆள், சிறியவனாகிய நான் பதில் அளித்தால் சரியாக இருக்காது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கிண்டலாக கூறினார்.

பெரிய ஆள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வேட்புமனுதாக்கல் செய்த பிறகு, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்த்தார். தொடர்ந்து நிருபர் ஒருவர் அண்ணாமலை குறித்து கேட்டபோது 'அண்ணாமலை மிகப்பெரிய ஆள், நான் மிகவும் சிறியவன். எனவே சிறியவனாகிய நான் அண்ணாமலைக்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது. அவரது பேச்சுகளை நான் பொருட்படுத்துவதில்லை. நல்ல நேரத்தில் அவரைப்பற்றி நாம் பேச வேண்டாம்' என்றார்.

கவலை இல்லை

இதுபோல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் தொடர்பாக புகார் அளித்து இருப்பது குறித்து நிருபர் ஒருவர் கேட்டதற்கு, 'ஜெயக்குமார் மீதே பல்வேறு புகார்கள் இருக்கின்றன. எனவே அவர் கூறும் புகார்களைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை' என்றும் பதில் அளித்தார்.

பேட்டியின் போது சட்டமன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் செல்வபெருந்தகை, எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், வி.சி.சந்திரகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story