ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உறுதி
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உறுதி
ஈரோடு
ஈரோட்டில் அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வேட்பாளர் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-
தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும். தமிழக முதல் -அமைச்சருக்கு ஈரோடு மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளது. எனவே வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் ஒத்துழைப்போடு திட்டங்கள் எளிதாக கொண்டுவரப்படும்.
கருணாநிதி முதல் -அமைச்சராக இருந்தபோது தான் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று சென்வாட் வரி முழுமையாக நீக்கப்பட்டது. நான் ஈரோடு மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன். எனது மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். மகன் பெயரை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
Related Tags :
Next Story