ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி அ.தி.மு.க.வுக்கு தக்க பாடத்தை புகட்டும்;ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி அ.தி.மு.க.வுக்கு தக்க பாடத்தை புகட்டும்;ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
x

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி அ.தி.மு.க.வுக்கு தக்க பாடத்தை புகட்டும் என்று ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

ஈரோடு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி அ.தி.மு.க.வுக்கு தக்க பாடத்தை புகட்டும் என்று ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

பச்சை பொய்

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் நடந்த அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பச்சை பொய்களை, பரப்புரை என்ற பெயரில் அவிழ்த்து விட்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் முடிவுகளை நன்றாக அறிந்து கொண்டிருக்கிற அவரின் உள்மனம், தோல்வி பயத்திலே துவழ தொடங்கி உள்ளது.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி எந்தவிதமான சாதனைகளையும் செய்து முடிக்கவில்லை. ஊழல் பற்றி பேச அவர்களுக்கு தகுதியே கிடையாது. பா.ஜ.க.விடமும், பிரதமர் மோடியிடமும் தங்களை மட்டும் அல்ல அ.தி.மு.க.வில் முன்னால் இருந்த தலைவர்களையும் அடிமை சாசனமாக எழுதி வைத்துவிட்டனர். பா.ஜ.க. என்ன சொன்னாலும் செய்து, தமிழக மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் தான் அவர்கள். உதய் மின் திட்டத்தில் ஜெயலலிதா இருந்தவரை அதனை ஒப்புக்கொள்ளவில்லை.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

ஆனால் 2015-ம் ஆண்டுக்கு பிறகு அன்றைய மின்சாரத்துறை அமைச்சரும், அவரது அமைச்சரவையும் ஒப்புக்கொண்டு, தமிழகத்தில் உதய் மின் திட்டத்தினை இணைத்தனர். இதன் விளைவாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட விளைவுகளை நாம் அறிந்ததே. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை முற்றிலுமாக ஆதரித்த ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி, அ.தி.மு.க.விற்கு தக்க பாடத்தை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் புகட்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் அடிப்படையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவில்லை. அதனால் தான் அந்த திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

57 சதவீதம்

புதுமை பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு 2022-2023-ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் நிகர சந்தை கடன் 57 சதவீதம் குறைந்துள்ளது.

எனவே, நல்ல நிதி நிர்வாகத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஜனநாயக முறையில் கூட்டணி கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். கூட்டணி தர்மத்தை மதித்து அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியை செய்கிறோம். நாங்கள் அ.தி.மு.க.வை போல கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதியை பறித்துக்கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story