மின்சாரம் தாக்கி முன்னாள் கவுன்சிலர் பலி
மூங்கில்துறைப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி முன்னாள் கவுன்சிலர் பலியானார்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு மணலூர் பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை (வயது 55). தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவர் நேற்று அதே பகுதியில் இருந்து மரக்கட்டைகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு மேல்சிறுவள்ளுருக்கு புறப்பட்டார். மணலூர் குளக்கரை பகுதியில் சென்றபோது, மரக்கட்டைகளுக்கு மேல் அமர்ந்து இருந்த அய்யந்துரை மீது மேலே சென்ற மின்கம்பி பட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அய்யந்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யந்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் டிராக்டரை அஜாக்கிரதையாக ஓட்டியதாக டிரைவர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.