முன்னாள் கவுன்சிலரின் கட்டிடத்தில் பயங்கர தீ


முன்னாள் கவுன்சிலரின் கட்டிடத்தில் பயங்கர தீ
x
தினத்தந்தி 10 Oct 2022 1:00 AM IST (Updated: 10 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் முன்னாள் கவுன்சிலரின் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இக்பால். இவருக்கு சொந்தமான கட்டிடம் பேகம்பூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் கோழி இறைச்சி கடையும், மேல்தளத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் குடோனும் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். தீ விபத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அதிகாலை நேரத்தில் கட்டிடம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




1 More update

Next Story