முன்னாள் காவலர்கள் சந்திப்பு
வேலூர் கோட்டையில் முன்னாள் காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
வேலூர்
தமிழக காவல்துறையில் கடந்த 1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்ட 330 பேர் வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றனர். அவர்களில் பலர் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இந்தநிலையில் 35-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அவர்கள் மீண்டும் சந்திக்க முயற்சி மேற்கொண்டனர்.
சமூக வலைதளம் மற்றும் செல்போன் மூலமாக சுமார் 40 பேர் ஒன்றிணைந்தனர். அவர்கள் நேற்று கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வந்தனர். ஆனால் தற்போது அங்கு பெண்களுக்கு போலீஸ் பயிற்சி அளிக்கப்படுவதால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் பயிற்சி பெற்ற மைதானத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது கடந்த கால நினைவுகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story