தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை- முன்னாள் அமைச்சர் காமராஜ்


தினத்தந்தி 20 Jan 2023 12:45 AM IST (Updated: 20 Jan 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டி உள்ளார்.

திருவாரூர்

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டி உள்ளார்.

நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வடக்கு ஒன்றியம் கீரனூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான ரா.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நிறைவேற்றவில்லை

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அவற்றில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என தி.மு.க. கூறியது. ஆனால் தி.மு.க. தலைமையிலான அரசு இன்று வரை அதைப்பற்றி எதுவுமே பேசவில்லை.

எனவே பொதுமக்கள் அ.தி.மு.க. ஆட்சி எப்போது வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள்

நிகழ்ச்சியில் நன்னிலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிபிஜி. அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் வாளூர் ஜெயராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, இந்திரா மதிவாணன், ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடேசன் (கடுவங்குடி), செல்வராசு (திருக்கொட்டாரம்), பிரகாஷ் (பில்லூர்), கிரிஜா ராஜா (கீரனூர்), கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் குமாரசேகர், ஊராட்சி துணைத்தலைவர் மோகன் (கீரனூர்), ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் செந்தில்குமார், நந்தகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், ஒன்றிய பாசறை செயலாளர் விசுவநாதன், கொத்தவாசல் முன்னாள் ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story