பட்டாசு கடை தீ விபத்து: பலியான குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆறுதல்


பட்டாசு கடை தீ விபத்து: பலியான குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆறுதல்
x

ஓசூர் அருகே பட்டாசு கடை தீ விபத்தில் பலியான 8 பேரின் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆறுதல் கூறினார்.

தர்மபுரி

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த பட்டாசு கடை தீ விபத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேடகட்டமடுவு ஊராட்சி டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 பேரும், நீப்பந்துறை பகுதியை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 8 பேர் பலியானார்கள். இறந்தவர்களின் உடல்கள் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்களுக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர் இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ராணிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story