முன்னாள் ஊராட்சி தலைவர் கைது


முன்னாள் ஊராட்சி தலைவர் கைது
x

முத்துப்பேட்டை அருகே போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த முன்னாள் ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த முன்னாள் ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் போலீஸ் சரகத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறி பின்னத்தூர் கிராம காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை அறிவித்தனர்.இதனையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

அனுமதி மறுப்பு

ஆனால் போலீசார் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பையன் தலைமையில் பின்னத்தூர் கிராம காங்கிரஸ் கட்சியினர் நேற்று எடையூர் போலீஸ் நிலையம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.மேலும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் வருகிற 21-ந் தேதி வரை முத்துப்பேட்டை உட்கோட்டத்தில் காவல் சட்டம் நடைமுறையில் உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், ஊர்வலம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுப்பதாக கடிதம் அனுப்பினார்.

கைது

இருப்பினும் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியினர் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனால் எடையூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசாா் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.இந்த நிலையில் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பையனை நேற்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து எடையூர் போலீசார் கைது செய்து எடையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான கிராம மக்கள் மற்றும் காங்கிரசார் போலீஸ் நிலையம் முன்பு கூடினர்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்்கு வந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கைது செய்யப்பட்ட சுப்பையன் விடுவிக்கப்படுவார் என்றும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினாா்.இதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறிய காங்கிரஸ் கட்சியினர் விடுவிக்கப்பட்ட சுப்ைபயனை நண்பகல் 12.30 மணியளவில் அழைத்து சென்றனர்.


Next Story