குன்னூர் அருகே ஓடும் பஸ்சில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை-முன்னாள் ராணுவ வீரர் கைது
குன்னூர் அருகே ஓடும் பஸ்சில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
குன்னூர்
குன்னூர் அருகே ஓடும் பஸ்சில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ெகாலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் போலீஸ் பணிபுரிந்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக கோவை சென்றார். அங்கு பணியை முடித்துவிட்டு கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்து அங்கிருந்து குன்னூருக்கு பஸ் ஏறினார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்புற இருக்கையில் ஆசாமி ஒருவர் அமர்ந்தார். பஸ் புறப்பட்டு குன்னூரை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப் போது அந்த ஆசாமி பெண் போலீசை பின்புறமிருந்து சில்மிஷம் செய்ய தொடங்கினார். அப்போது பெண் போலீஸ் எழுந்து சத்தம் போட்டுவிட்டு அமர்ந்து கொண்டார். இருப்பினும் அந்த ஆசாமி மீண்டும் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
பெண் போலீஸ் மீது தாக்குதல்
இதனால் மீண்டும் பெண் போலீஸ் சத்தம் போடவே தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஆசாமி பெண் போலீசை தாக்கியதாக கூறப்படுகிறது. பஸ்சில் இருந்த சக பயணிகள் இதனை தட்டி கேட்ட போது தனக்கு உயர் அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
அதற்குள் பஸ் குன்னூர் அருகே உள்ள காட்டேரி வந்தது. இதையடுத்து அந்த நபர் காட்டேரியில் இறங்கி வேறு பஸ்சில் ஏறினார். இதனை கண்ட பெண் போலீசும் உடனே கீழே இறங்கி, அதே பஸ்சில் ஏறி பஸ் டிரைவரிடம் லெவல் கிராசிங்கில் நிறுத்துமாறு கூறினார். இதற்குள் மற்ற போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். பஸ் லெவல் கிராசிங்கில் நின்றவுடன் மற்ற போலீசார் உதவியுடன் அந்த நபரை பஸ்சிலிருந்து இறக்கி குன்னூர் நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
குன்னூர் அருகே ஓடும் பஸ்சில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் கோத்தகிரி அருகே உள்ள அஜ்ஜூர் பகுதியை சேர்ந்த தருமன் (வயது 56) என்பதும், முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஓடும் பஸ்சில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தருமனை கைது செய்தனர். மேலும் அவர் குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.