மொபட் - மோட்டார் சைக்கிள் மோதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி


மொபட் - மோட்டார் சைக்கிள் மோதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி
x

மொபட் - மோட்டார் சைக்கிள் மோதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.

வேலூர்

கே.வி.குப்பம்

மொபட் - மோட்டார் சைக்கிள் மோதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த குக்கலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 75). முன்னாள் ராணுவ வீரர். இவர் லத்தேரி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் 17 யது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் ஜெயராமன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

இது குறித்து லத்தேரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் எம்.குமரன் வழக்கு பதிவு செய்து, ஜெயராமன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.



Next Story