முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
வேலூர்
குடியாத்தம் அடுத்த செருவங்கி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், முன்னாள் ராணுவ வீரர். தற்போது சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலையில் வைகை நகரில் உள்ள சுரேஷ்குமார் வீட்டை அவரது உறவினர்கள் திறந்த போது வீட்டின் பின்புறம் கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ஆனந்தன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடைபெற்ற இடத்தில் ரேகைகளை பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story