முன்னாள் படைவீரர்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x

முன்னாள் படைவீரர்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

முன்னாள் படைவீரர்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் தரம்-3 பணியிடத்திற்கு நேரடி தேர்வு மூலம் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. தற்போது ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் மாதச் சம்பளம் ரூ.13 ஆயிரம் ஆகும். 12-ம் வகுப்பு தேர்ச்சி, மருத்துவ கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் பாட பிரிவு முடித்திருக்க வேண்டும்.நல்ல ஆரோக்கியமான உடற்தகுதி, கண்பார்வை மற்றும் வெளிப்புற வேலைகளை செய்யும் தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் வருகிற 2-ந் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) www.mrb.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story