முன்னாள் படைவீரர்கள் கருணை தொகையை பெறலாம்


முன்னாள் படைவீரர்கள் கருணை தொகையை பெறலாம்
x

முன்னாள் படைவீரர்கள் கருணை தொகையை பெறலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழக கவர்னர் தலைமையில் நடைபெற்ற தொகுப்புநிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் போர், போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோர் மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் கருணை உதவித்தொகை உயர்த்தப்பட்டு வழங்கப்படவுள்ளது. அதன்படி, போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரை சார்ந்த அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வந்த கருணை உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்ந்துள்ளது. போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் கருணை உதவித்தொகை பெற்று பயனடையலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் தொடர்புகொண்டு கருணை உதவித்தொகை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story