தூத்துக்குடியில், வியாழக்கிழமை முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தூத்துக்குடியில், வியாழக்கிழமை முன்னாள் படைவீரர்கள்   குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், வியாழக்கிழமை முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story