பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடிகள் வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்கள்


பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடிகள் வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்கள்
x

பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடிகளை முன்னாள் ராணுவ வீரர்கள் வழங்கினர்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படை வீரர்கள், வீரமங்கையர்கள் அமைப்பு மற்றும் சோழப்பேரரசின் போர் வீரர்கள் சார்பாக 6 ஆயிரம் தேசிய கொடிகள், செந்துறை பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் மாநில துணை தலைவர் பொய்யாமொழி முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் வேணு, நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், ஆசைத்தம்பி, முருகன், தமிழரசன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6 ஆயிரம் தேசிய கொடிகளை வழங்கினர். பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்றை ஊட்டும் விதமாக ஒவ்வொரு மாணவரும், தேசிய கொடியை அணிந்து கொள்ளும் வகையில் இந்த தேசிய கொடிகள் வழங்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story