முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்


முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

கரூர்

கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story