முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்


முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், 52 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் 8 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும், 1971-ம் ஆண்டு வங்காளதேச போரில் கலந்து கொண்ட முன்னாள் படைவீரர்களுக்கு தென்பிராந்திய (சென்னை) தளபதியிடமிருந்து பெறப்பட்டுள்ள பாராட்டு சான்றிதழ் 13 பேருக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story