முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம்
தென்காசியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
தென்காசி
தென்காசி பட்டாளம் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசியில் நடைபெற்ற ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 1500 பேர் கலந்து கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டி பற்றிய கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. மேலும் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் என்.ஆர்.எஸ். மணி, கல்யாண சுந்தர், வேலுச்சாமி, ரஞ்சித், காமேஷ்குமார், ராஜேந்திரன், கருப்பசாமி, சக்தி குமார், மகேசன், முனீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாளர் சங்கர் மாரத்தான் வரவு செலவு கணக்குகளை விளக்கமாக எடுத்துரைத்தார். செயலாளர் வி.கே.முருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story