மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 4-வது இடம்


மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 4-வது இடம்
x

மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.05 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4-வது இடம் பிடித்து உள்ளது. பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தது.

மதுரை


மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.05 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4-வது இடம் பிடித்து உள்ளது. பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 5-வது இடத்தை பிடித்தது.

4-வது இடம்

மதுரை மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் மாநில அளவில் 13-வது இடத்தில் இருந்த பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. அதாவது தேர்ச்சி விகிதம் 96.89 சதவீதமாக உள்ளது. அதேபோல, 9-வது இடத்தில் இருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் தற்போது 4-வது இடத்துக்கு வந்து உள்ளது. தேர்ச்சி விகிதம் 95.05 சதவீதமாக உள்ளதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 17,166 மாணவர்களும், 17,662 மாணவிகளும் எழுதினர். இவர்களில் 16,333 மாணவர்களும், 17,412 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 95.15 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 98.58 சதவீதமாகவும் உள்ளது.

மதுரை கல்வி மாவட்டத்தில் 96.29 சதவீதம் பேரும், மேலூர் கல்வி மாவட்டத்தில் 96.77 சதவீதம் பேரும், திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 97.76 சதவீதம் பேரும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 97.21 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி.

மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 19,505 மாணவர்களும், 19,054 மாணவிகளும் என 38,559 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 18,086 மாணவர்களும், 18,579 மாணவிகளும் என 36,665 பேர் தேர்ச்சி பெற்று 95.09 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதில், மதுரை கல்வி மாவட்டத்தில் 93.73 சதவீதமும், மேலூர் கல்வி மாவட்டத்தில் 95.21 சதவீதமும், திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 95.22 சதவீதமும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 97.82 சதவீதமும் தேர்ச்சியடைந்து உள்ளனர்.


Next Story