தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது-22,338 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது-22,338 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தேர்வை மொத்தம் 22,338 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் இதற்காக 4 தனித்தேர்வர் மையங்கள் உள்பட 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி, பாலக்கோடு, அரூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 118 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 107 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 96 மெட்ரிக் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 321 பள்ளிகள் உள்ளன. 11,653 மாணவர்களும், 11,685 மாணவிகளும் என மொத்தம் 22,338 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வைமொட்டி 9 இடங்களில் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் காப்பாளர்கள், கட்டு காப்பாளர்கள், முதன்மை அறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 1,920 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பறக்கும் படை

தேர்வில் மாணவ, மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகள் நடப்பதை கண்காணிக்கவும் 102 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அங்கு மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story