எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16,962 பேர் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16,962 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16,962 பேர் எழுதினர். 539 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16,962 பேர் எழுதினர். 539 பேர் தேர்வு எழுத வரவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு குறித்து கலெக்டர் கூறியதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனித்தேர்வர்களும், 165 மாற்றுத்திறனாளி தேர்வர்களும் என மொத்தம் 17,501 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வுக்காக 84 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று நடைபெற்ற முதல் நாள் தேர்வுக்கு 539 மாணவர்கள் வரவில்லை. 16,962 பேர் தேர்வு எழுதினர். அனைத்து தேர்வு மையங்களிலும் உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு நல்ல முறையில் தேர்வு நடைபெற்றது. இதே போல் தொடர்ந்து அனைத்து தேர்வுகளும் நடைபெற்றிட தேவையான அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, தேவப்பிரிய தர்ஷினி, பொறியாளர் ஜம்பு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story