கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடக்கும்`நீட்' தேர்வை 4,946 மாணவர்கள் எழுதுகின்றனர்
கிருஷ்ணகிரி
இந்தியாவில் மாணவர்கள் மருத்துவத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு `நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. முன்னதாக தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் இன்று மதியம் 1.30 மணிக்குள் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் `நீட்' தேர்வு 6 மையங்களில் நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் 4,946 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story