கிணத்துக்கடவில் ஆய்வு: டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கினால் கடும் நடவடிக்கை-மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
மருந்துக்கடைகளில் ஆய்வு
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மருந்தகங்களில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மருந்துகள் ஆய்வாளர் ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் கிணத்துக்கடவு ஆர். எஸ்.ரோடு, கோவை- பொள்ளாச்சி மெயின் ரோடு ஆகிய பகுதியில் உள்ள மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்துகளின் காலாவதி தேதிகள் சரிபார்க்கப்பட்டன.
மேலும் கடைகளில் மருந்துகள் தரம் குறித்து கேட்டு அறிந்தனர். இதேபோல் மருந்துக்கடைகளில் வலிநிவாரணி மருந்துகள் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் வழங்கக்கூடாது என்று என்று மருந்துக்கடை உாிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
போதை பொருள் இல்லாத பகுதியாக கிணத்துக்கடவை உருவாக்கி வருகிறோம். இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உரிமம் ரத்து செய்யப்படும்
போதை தரும் இருமல் மாத்திரை மற்றும் கேன்சர் மற்றும் பிரசவ காலத்தில் வலிக்கு பயன்படுத்தும் மாத்திரை மற்றும் தூக்க மாத்திரை மற்றும் சிரப்பு போன்ற மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் அது போதைப் பொருளாக மாறி விடுகின்றன. இதனை தடுக்கும் வகையில் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்க கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளோம். அதை மீறி மருந்து மாத்திரை வழங்கும் மருந்துகங்களில் உரிமம் ரத்து செய்யப்படும்.
கடைக்கு சீல் வைத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.