ஓமலூர் கோர்ட்டில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு


ஓமலூர் கோர்ட்டில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
x

ஓமலூர் கோர்ட்டில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

சேலம்

ஓமலூரில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு நேற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேலுமணி, செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்ததுடன், கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள், வக்கீல்கள் ஆகியோருக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வக்கீல்கள் சங்கம் மற்றும் வக்கீல்கள் சார்பில் பொதுமக்கள் வசதிக்காக பொதுக்கழிப்பிடம், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள வசதி, நடைபாதை, லிப்ட், வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது ஓமலூர் வக்கீல்கள் சங்க தலைவர் ரங்கநாதன், செயலாளர் சிவக்குமார், அரசு வக்கீல் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு நீதிபதிகள் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தனர்.


Next Story