அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட திமில்காளை சிற்பம், காதணி கண்டெடுப்பு


அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட திமில்காளை சிற்பம், காதணி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட திமில்காளை சிற்பம், காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் தெரிவித்தார்.

விருதுநகர்

தாயில்பட்டி

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட திமில் உடைய காளையின் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மை முன்னோர்கள் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டதற்கு சாட்சியாக உள்ளது. வீர விளையாட்டுகளில் பயன்படுத்தும் சின்னமாகவும் இதனை பயன்படுத்தி இருக்கலாம். மேலும் விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் காதணி, விளையாட்டு பொருள், இரும்பு கருவி கிடைத்துள்ளது.

இதுவரை நாயக்கர்மன்னர் காலத்தில் பயன்படுத்திய செப்புக்காசுகள், தங்கத் தாலி, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், யானை தந்ததால் செய்யப்பட்ட ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள் உள்பட 4,520 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.


Next Story