கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது


கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை போஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி (வயது 48). இவருடைய கணவர் பாண்டி. மாற்றுத்திறனாளி. உமாதேவியின் தந்தை அர்ஜுனன். இவருக்கு மானாமதுரையை அடுத்த பெரிய கோட்டை கிராமத்தில் வீட்டு மனை மற்றும் இடம் உள்ளதாம். இந்த இடத்திற்கு கூட்டு பட்டா கேட்டு பல முறை உமாதேவி மனு கொடுத்துள்ளார். இந்த மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மீண்டும் மனு கொடுக்க வந்த உமாதேவி திடீரென்று தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பாா்த்து அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.இது குறித்து சிவகங்கை நகர் போலீசார் உமாதேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story