கவுன்சிலரின் கணவர் நாற்காலிகளுடன் வந்ததால் பரபரப்பு


கவுன்சிலரின் கணவர் நாற்காலிகளுடன் வந்ததால் பரபரப்பு
x

பெண்ணாடம் பேரூராட்சி மன்ற கூட்டத்துக்கு கவுன்சிலரின் கணவர் நாற்காலிகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் அமுத லட்சுமி ஆற்றலரசு தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் பாஸ்கரன், துணை தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு 5-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் செல்வியின் கணவர் அய்யப்பன் வீட்டில் இருந்து 2 நாற்காலிகளை எடுத்து வந்தார். பின்னர் அவர் அலுவலகத்தில் உள்ள கூட்டமன்ற அறையின் வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தார்.

இதுகுறித்து அய்யப்பன் கூறுகையில், கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் மன்றத்தின் வெளியே பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் இன்று(அதாவது நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் பார்வையாளர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்து நாற்காலிகளை எடுத்து வந்தேன் என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story