பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு


பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
x

சங்கரன்கோவில் அருகே பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் 60 குடும்பத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு நிரந்தர சுடுகாடு அந்த பகுதியில் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இதனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு நிரந்தர சுடுகாடு அமைக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலுக்கு முயன்றனர். மேலும் இறந்த பெண்ணின் உடலை சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் வருவாய் துறையினர், யூனியன் அலுவலர்கள் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 20 நாட்களில் நிரந்தர சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கப்படும் உறுதிமொழி அளித்ததின் பெயரில் சாலை மறியல் முயற்சியை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story