கோத்தகிரி அருகே விடுதிக்குள் புகுந்த 3 கரடிகளால் பரபரப்பு


கோத்தகிரி அருகே விடுதிக்குள் புகுந்த 3 கரடிகளால் பரபரப்பு
x

கோத்தகிரி அருகே விடுதிக்குள் புகுந்த 3 கரடிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அளக்கரை பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்த வெளியே 3 கரடிகள் உலா வந்தன. அப்போது அந்த கரடிகள் அப்பகுதியில் இருந்த தனியார் தங்கும் விடுதியின் பாதுகாப்புச் சுவரின் மீது ஏறி தங்கும் விடுத்து வளாகத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக புகுந்தன. அவை விடுதியின் பின்புறம் அமைந்துள்ள சமையலறையின் வெளிப்புறத்தில் கொட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மீதமான உணவுக் கழிவுகளை ருசித்து உண்டு விட்டு, மீண்டும் அங்கிருந்து வெளியேறிச் சென்றன.

இந்த காட்சி விடுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்கு உலா வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story