ஈரோட்டில் பரபரப்புகாவிரி ஆற்றில் 2 முதியவர் உடல்கள் மீட்புகொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
ஈரோடு காவிரி ஆற்றில் 2 முதியவர் உடல்கள் மீட்கப்பட்டது. அவா்கள் கொலை செய்யப்படடனரா ? அல்லது தற்கொலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு காவிரி ஆற்றில் 2 முதியவர் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிதந்து சென்ற உடல்கள்
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே காவிரி ஆறு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் 3 உடல்கள் மிதந்து செல்வதாக தகவல் பரவியது. அதன் பேரில் ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் போலீசார், ஈரோடு தீயணைப்பு துறையினர் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள், அங்கு பரிசல் மூலம் மீனவர்களின் உதவியுடன் உடல்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் உடல் மீட்கப்பட்டது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
வெண்டிபாளையத்தில் மீட்பு
இதேபோல் மொடக்குறிச்சி வெண்டிபாளையம் பாலம் அருகே, காவிரி ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பிணமாக மிதந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். வெள்ளை டிராயரும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்?. எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற எந்த தகவல் தெரியவில்லை.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு துறையினர் கூறும்போது, 2 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 3-வது உடலை தேடினோம், ஆனால் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. என்றனர்.
கொலையா? தற்கொலையா?
ஒரே நேரத்தில் 2 உடல்கள் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதால், ஆற்றில் குளிக்கும் போது அவர்கள் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாரும், மொடக்குறிச்சி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் 2 முதியவர்கள் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.