சொத்து வரி சீரமைப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்


சொத்து வரி சீரமைப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்
x

வாணியம்பாடி நகராட்சி, உதயேந்திரம் பேரூராட்சியில் சொத்து வரி சீரமைப்பு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமை வகித்தார். ஆணையாளர் ஸ்டான்லிபாபு முன்னிலை வகித்தார். பொறியாளர் சங்கர் வரவேற்றார்.

கூட்டத்தில் சொத்து வரி சீராய்வு தீர்மானம் வாசிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் ஹபீப்தங்கல், நாசீர்கான், முஹமத்துஅனீஸ், முஹம்மத்பஷீர்அஹமத், மா.பா.சாரதி, கலீல்பாஷா ஆகியோர் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான திட்டங்கள், பணிகள் குறித்து கோரிக்கை வைத்து பேசினர்.

கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் நகர்மன்றத் தலைவர் உமாபாய்சிவாஜிகணேசன் கூறினார்.

இந்த கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர் வி.எஸ்.சாரதிகுமார், பிரகாசம், ஜாகீர் உட்பட 34 மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலாளர் ஜெய்பிரகாஷ் நன்றி கூறினார்.

இதே போன்று, உதயேந்திரம் பேரூராட்சியில் பேருராட்சி மன்றத் தலைவர் பூசாராணி தலைமையில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் சொத்துவரி சீராய்வு தீர்மானம் 8 வார்டு உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட சொத்துவரி சீராய்வு தீர்மானத்தை அ.தி.மு.க.வார்டு உறுப்பினர்கள் 7 பேரும் எதிப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் செயல்அலுவலர் ரேவதி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள் ஆ.செல்வராஜ், கா.சரவணன், மரியஜோசப், ஆர்.சரவணன் உள்பட பலர் கலந்துக் கொண்டு பேசினர்.


Next Story