கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஒத்திகை


கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஒத்திகை
x

கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.

திருச்சி

திருச்சி மாநகரில் பணியாற்றி வரும் போலீசாருக்கு வாராந்திர கவாத்து, யோகா மற்றும் உடற்பயிற்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த பயிற்சியை தொடர்ந்து, ஆயுதப்படை போலீசாருக்கு கலவரங்கள் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் துணை கமிஷனர்கள் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை போலீசாரில் குறிப்பிட்ட சிலர் சட்டவிரோதமாக கூடி நின்று கலவரத்தில் ஈடுபடுவது போன்றும், அதை மற்றொரு பிரிவு ஆயுதப்படை போலீசார் கலைந்து செல்லாவிட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என்று எச்சரிக்கை செய்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்றும் தத்ரூபமாக ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் சுமார் 200 ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் விக்னேஷ்வரன் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்கள் பலர் பங்கேற்றனர்.


Next Story