அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x

நாமகிரிப்பேட்டை அருகே அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

நாமக்கல்

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்குறிச்சி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரண உதவி தொகை வழங்கியது, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டது, மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தது, 75-வது சுதந்திர தினத்தன்று தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தது உள்ளிட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோதும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை வழங்கிய போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தனர். அதேபோல் நீர்வளத் துறை சார்பில் ஆறுகளில் தூர் வாரும் பணிகளின் புகைப்படங்கள், புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்படும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் என பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் அதில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.


Next Story