கைதிகளுக்கு பரிசோதனை செய்ய மறுப்பு


கைதிகளுக்கு பரிசோதனை செய்ய மறுப்பு
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:46 PM GMT)

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகளுக்கு பரிசோதனை செய்ய மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். திருப்பத்தூர் துணை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கண்டவராயன்பட்டி, கீழச்சிவல்பட்டி, நாச்சியாபுரம், திருக்கோஷ்டியூர், நெற்குப்பை, பூலாங்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய கைதிகளை போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக இந்த அரசு ஆஸ்பத்திரிக்குதான் அழைத்து வருகின்றனர்.

ஆனால் இங்கு வரும் கைதிகளை டாக்டர்கள் பரிசோதனை செய்யாமல் அனைத்து கைதிகளையும் சிவகங்கை மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரை செய்து அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு கைதிகளை அங்கு அனுப்புவதால் போலீசார் கைதிகளுடன் நாள் முழுவதும் பயணம் செய்து அலையும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே கைதிகளை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story