மாணவர்களுக்கு பேரிடர்கால செயல்முறை விளக்கம்
மாணவர்களுக்கு பேரிடர்கால செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மு.வகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த நாட்டுநல திட்டப்பணி மாணவர்களுக்கு தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் துறைமூலம் செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் துறை பொறுப்பு அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மங்களநாதன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை அலுவலர்கள் புயல், வெள்ளம், பேரிடர் காலங்களில் தங்களை பொதுமக்கள் எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும். தீ விபத்து, பாம்பு கடிக்கும்போதும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் காட்டினர். முடிவில் உதவி திட்ட அலுவலர் விஜய்ஆனந்த் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story