கிணத்துக்கடவில் போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்
கிணத்துக்கடவில் போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகள் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் உள்ள பணிகளை பார்வையிட வந்தனர் போலீஸ் நிலையம் வந்த மாணவ -மாணவிகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இனிப்பு வழங்கி வரவேற்றார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, மாணவ- மாணவிகள் படிக்கும் போது தங்களுக்குள் ஒரு லட்சியத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். படிப்பிலும் விளையாட்டிலும் கவனம் செலுத்தி உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவிகளுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூற வேண்டும் என்றார். பின்னர் மாணவ -மாணவிகள் போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் அறைகளை பார்வையிட்டனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறையை பார்வையிட்டு போலீசாரிடம் சந்தேகங்களை கேட்டறிந்தனர். அதன் பின்னர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் உள்ள கைதிகள் அறை, ஆயுதக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் செயல்படும் விதம் குறித்தும் போலீசார் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.