பென்னாகரத்தில் விபத்து விழிப்புணர்வு கண்காட்சிதுணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


பென்னாகரத்தில் விபத்து விழிப்புணர்வு கண்காட்சிதுணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:30 AM IST (Updated: 17 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பென்னாகரம் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சி வாகனத்தை பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் வாகனங்களில் செல்லும்போது சாலை விதிகளை கடைபிடிப்பது, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது, 4 சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. கண்காட்சி வாகனம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் நிறுத்திவைக்கப்பட்டது. இதை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர். இதில் பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன், பென்னாகரம் போக்குவரத்து பணிமனை மேலாளர் மணிவண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story