மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழில் ஊர் பெயர் எழுதப்பட்டது


மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழில் ஊர் பெயர் எழுதப்பட்டது
x

‘தினத்தந்தி’ செய்தி காரணமாக மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழில் ஊர் பெயர் எழுதப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

'தினத்தந்தி' செய்தி காரணமாக மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழில் ஊர் பெயர் எழுதப்பட்டது.

மைசூரு எக்ஸ்பிரஸ்

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஒசூர், பெங்களூரு வழியாக மைசூருக்கு தினசரி விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த விரைவு ரயில் மயிலாடுதுறையில் இருந்து தினசரி மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மைசூரு சந்திப்பை அடையும்.மைசூரு சந்திப்பில் இருந்து தினசரி மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இந்த ரெயில் மறுநாள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறை சந்திப்பை வந்தடைகிறது. முக்கிய தொழில் மற்றும் கோவில் நகரங்களை கடந்து செல்லும் இந்த மயிலாடுதுறை - மைசூரு விரைவு ரெயிலின் பயண தூரம் 80 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளது. இதில் தமிழ் பேசுபவர்கள்தான் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.

தமிழில் ஊர் பெயர்

தமிழகத்தின் நகரங்களையும், பெங்களூரு, மைசூரு போன்ற கர்நாடக மாநிலத்தின் நகரங்களையும் இணைக்கும் முக்கிய ெரயிலின் பெயர் பலகையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே புறப்படும் இடம், சேரும் இடம் பலகையில் இடம் பெற்று இருந்தது. இதை சுட்டிக்காட்டி மயிலாடுதுறை ெரயில் பயணிகள் சங்கத்தினர் ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கு புறப்படும் இடம்- சேரும் இடம் ஆகியவற்றை தமிழிலும் எழுத வேண்டும் என்று கோரிக்கை மனு அனுப்பினர்.

நன்றி

இதுகுறித்த செய்தி கடந்த மாதம் 26- ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் வெளிவந்தது. இந்தநிலையில் மயிலாடுதுறை-மைசூரு எக்ஸ்பிரஸ் ெரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள அந்த பலகைகளில் கன்னடம், இந்தி, ஆங்கிலத்தோடு சேர்த்து தமிழ் மொழியிலும் தற்போது பெயர் எழுதப்பட்டுள்ளது. மயிலாடுதுறை- மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தமிழில் ஊர் பெயர் எழுதிய ரெயில்வே அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story