எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வருகை


எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வருகை
x

நீடாமங்கலத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

30 நிமிடங்கள் தாமதம்

சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் நாள்தோறும் அதிகாலை சுமார் 4.35 மணிக்கு நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று அதிகாலை சுமார் 5.05 மணிக்கு நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் வந்தது. சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் வந்ததால் ெரயில் பயணிகள் சிரமப்பட்டனர்.

செம்மொழி எக்ஸ்பிரஸ்

கோவையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ெரயில் காலை சுமார் 6.30 மணிக்கு நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம்.இந்த ெரயில் நேற்று காலை சுமார் 8 மணிக்கு மேல் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் இந்த ரெயில் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது.இதைப்போல எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலும் 1 ஒருமணிநேரம் தாமதமாக நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது.இதனால் ெரயில் பயணிகள் அவதிப்பட்டனர்.


Next Story