எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x

சிக்னல் கோளாறு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, ஒருமணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

ராணிப்பேட்டை

திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் வாரந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணம் மற்றும் திருத்தணி செல்லும் புறநகர் ரெயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சிக்னலை செய்யும் பணியில் ஈடுபட்டு கோளாறை சரி செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. இதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.


Next Story