ஆள்மாறாட்டம் செய்து ரூ.2½ கோடி நிலம் அபகரிப்பு


ஆள்மாறாட்டம் செய்து ரூ.2½ கோடி நிலம் அபகரிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2023 12:30 AM IST (Updated: 5 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.2½ கோடி நிலத்தை அபகரித்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்


கோவை


கோவையில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.2½ கோடி நிலத்தை அபகரித்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


அடமானக் கடன்


கோவை கோர்டுவின்ஸ் ராம்ராஜ் நகரை சேர்ந்தவர் பாலதண்டாயுதம் (வயது 50). இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-


எனது தந்தை சபாபதிக்கு சொந்தமாக காளப்பட்டியில் 11 சென்ட் நிலம் உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். கடந்த 1985-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக எனது தந்தை இறந்து விட்டார்.


இதையடுத்து எங்களது குடும்பத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக எனது தாயார் எனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தின் பத்திரத்தை எங்களது உறவினர் சுசீலாமணி என்பவரி டம் அடமானம் வைத்து பணம் கடனாக பெற்றார்.


ஆள்மாறாட்டம்


அதன்பிறகும் எங்களுக்கு இருந்த தொடர் பண கஷ்டம் காரண மாக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட் டது. இதற்கிடையே சுசீலாமணி, போலி ஆவணம் மூலம் கரூரை சேர்ந்த பாபு என்பவரை பாலதண்டாயுதம் என்று ஆள்மாறாட் டம் செய்து குணசேகரன் என்பவருக்கு நிலத்தை விற்க அதிகா ரம் கொடுத்து கடந்த 2007-ம் ஆண்டு பத்திரம் பதிவு செய்து கொடுத்து உள்ளனர். இதற்கு ராமநாதன் என்பவர் உடந்தையாக இருந்து உள்ளார்.


வழக்குப்பதிவு


அதன்பிறகு 2 மாதங்களில் அந்த நிலத்தை கனகராஜ் என்பவ ருக்கு விற்பனை செய்து உள்ளனர். எனவே எங்களுக்கு சொந்த மான ரூ.2½ கோடி மதிப்பிலான 11 சென்ட் நிலத்தை ஆள்மாறாட் டம் மற்றும் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


அதன் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய சுசீலாமணி, பாபு ஆகியோர் இறந்து விட்டனர். கனகராஜ், ராமநாதன், குணசேகரன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story