ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ராமநாதபுரம்

ராமேசவரம்,

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

விரட்டியடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் இலங்கை கடற்படையினர் அறுத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

புகார் இல்லை

இதன் காரணமாக நேற்று காலை குறைந்த அளவு மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள். இலங்கை கடற்படை விரட்டியடிப்பு, தாக்குதல் சம்பவம் குறித்து ராமேசுவரம் மீனவர்கள் யாரும் மீன் துறை அலுவலகத்திலோ, கடலோர போலீசாரிடமோ எந்த ஒரு புகாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story