இலங்கை போலீஸ்காரருக்கு காவல்நீட்டிப்பு


இலங்கை போலீஸ்காரருக்கு காவல்நீட்டிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை போலீஸ்காரருக்கு காவல்நீட்டிப்பு செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

ராமநாதபுரம்

இலங்கை துறைமுக காவல்நிலைய போலீஸ்காரர் அர்த்த நாயக முதியான் சமீந்த பிரதீப் குமார் பண்டாரா (வயது 32). இவர் பணிபுரிந்த போலீஸ் நிலையத்தில் கைப்பற்றி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை திருடியதாக இலங்கை போலீசார் தேடினர். இதனை தொடர்ந்து பிரதீப் குமார் பண்டாரா இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக பைபர் படகு ஒன்றில் கடந்த 2020-ம் ஆண்டு தமிழகம் தப்பி வந்தார். தமிழகத்தில் கைதான இவர் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரதீப் குமார் பண்டாராவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டு திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக அவரை நேற்று ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்பாடுகள் செய்தனர். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அவர் மீதான வழக்கு விசாரணையை ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டு நீதிபதி பிரபாகரன் அடுத்த மாதம் (நவம்பர்) 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story