தமிழகத்தில் 1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் 1- 5ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - கல்வித்துறை உத்தரவு
x

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அக்டோபர் 6 - 8ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடப்பதாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது


Next Story